தமிழகத்தில் இன்று புதிதாக 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,33,585 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,307 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,16,205 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 5,073 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
The post தமிழகத்தில் இன்று புதிதாக 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on தமிழ் செய்தி.