Type Here to Get Search Results !

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா: துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மணிமண்டபத்தில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குவிக்.
தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்துவருகிறது.
இதற்காக தமிழக அரசு தேனி மாவட்டம் லோயர் கேம்பில் பென்னிகுயிக்கிற்கு வெண்கலச்சிலை அமைத்து மணிமண்டபம் கட்டி அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகின்றது.
வெள்ளிக்கிழமை 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மண்டபத்திற்கு வந்து முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து ப.ரவீந்திரநாத் எம்.பி, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி, கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.அருண்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.