தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி இன்று(ஜன.,23) கோவை கோனியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து அவர் கோவை ராஜவீதியில் பிரசாரத்தில் பேசுகையில்:
கோவை செல்வபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி.
திமுக குடும்பத்திற்காக வாழும் தலைவரை பெற்றது. குடும்ப நலனே அவர்களுக்கு பெரிது. ஆனால் அதிமுகவில் மக்களுக்காக தொண்டு ஆற்றும் தலைவர்கள் உள்ளனர்.இது தான் நமக்கு பெருமை. இந்த தலைவர்களின் வழியில் நடக்கிறோம். கட்சியை , ஆட்சியை கலைக்க முற்பட்டார் ஸ்டாலின். ஆனால் நாங்கள் அதனை முறியடித்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வசூல் வேட்டை, கட்டப்பஞ்சாயத்து செய்வர். கொலை, கொள்ளை உருவாகும். யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது. அத்தகைய ஆட்சி தேவையா , ஊழலுக்கு கலைக்கப்பட்ட கட்சி திமுக. எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது. அராஜக ஆட்சி செய்யும் திமுகவை வர விடாமல் பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கோவையில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை சந்தித்து முதல்வர் பழனிசாமிஆசி பெற்றார் . அப்போது, திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்தார்.
கோவை, ஆத்துப்பாலம் அருகே போத்தனூர் பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுடன், முதல்வர் பழனிசாமி உரையாடினார்.
The post கோவை கோனியம்மன் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம் appeared first on தமிழ் செய்தி.