Type Here to Get Search Results !

தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் வெற்றி… வாழ்க்கைக்கான பாடம்…. பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது என்பது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. இந்தியா 4-0 என தோற்கும் என்று சூளுரைத்தவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்பட்டது.
அணியின் முன்னணி வீரர்கள் பெரும்பாலானோர் காயத்தால் அடுத்தடுத்து போட்டியில் இருந்து வெளியேற, இரண்டாம் தர வீரர்களை வைத்து கோப்பையை வென்று வந்திருக்கிறது இந்திய அணி.
இந்நிலையில், அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலையில் இறுதியாண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் மத்தியில் வீடியோ கான்ஃபரசிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த தருணத்தில் நாட்டின் செயல்பாட்டையும், இந்திய கிரிக்கெட் அணியின் 2-1 என்ற ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியையும் அவர் ஒப்பிட்டு பேசினார்.
“தொற்றுநோயின் தொடக்கக் காலத்தில், என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர், ஆனால் நாம் தீர்வுகளைக் கண்டறிந்து கொரோனாவை எதிர்த்துப் போராடினோம். முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நமது தடுப்பூசிகள் நம் விஞ்ஞானிகள் மீதான நம்பிக்கையின் விளைவாகும்” என்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் குறித்து பெருமையுடன் பிரதமர் மோடி பேசினார்.
“நாம் 75வது சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். இப்போது நீங்கள் ஒரு புதிய இந்தியாவுக்காக (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) வாழ வேண்டும். இந்த ஆண்டு முதல் 100வது சுதந்திர ஆண்டு வரை, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
நேர்மறையான விளைவுகளுக்கு நேர்மறையான மனநிலை முக்கியமானது. இதுவே தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சாராம்சம் என்றும்” மோடி கூறினார்.
“பல சவால்களை எதிர்கொண்ட நமது கிரிக்கெட் அணி (மனநிலையின் மாற்றத்திற்கு) மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. நாம் முதல் போட்டியில் மோசமாக தோற்றோம். ஆனால், நாம் மீண்டும் போராடி சவாலான சூழ்நிலையில் வென்றோம். நமது கிரிக்கெட் அணிக்கு குறைந்த அனுபவமே இருந்த போதிலும், அதிக அளவில் இருந்த நம்பிக்கை புதிய வரலாற்றை உருவாக்கியது.

The post தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் வெற்றி… வாழ்க்கைக்கான பாடம்…. பிரதமர் மோடி appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.