”தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் விரைவில் பதவியேற்பார்,” என, சட்டசபை துணை சபாநாயகர் பத்மா ராவ் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை துணை சபாநாயர் பத்மா ராவ், தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தெலுங்கானா அரசியலில் விரைவில் மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆட்சியில் கூட மாற்றம் ஏற்பட உள்ளது. மாநிலத்தின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ், விரைவில் பொறுப்பேற்பார்.
அடுத்த மாதம் இந்த மாற்றம் ஏற்படும். இது பற்றி, சந்திரசேகர ராவ் குடும்பத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யமோ, அதிசயமோ எதுவும் இல்லை. ஏனெனில், அரசின் நல திட்டங்கள் அனைத்தும், ராமாராவின் ஆலோசனைப்படி தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
The post தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக மகன்…! அடுத்த மாதம் இந்த மாற்றம் ஏற்படும்…! first appeared on தமிழ் செய்தி.
The post தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக மகன்…! அடுத்த மாதம் இந்த மாற்றம் ஏற்படும்…! appeared first on தமிழ் செய்தி.