இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,408 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,08,02,591-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து புதிதாக 15,853 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,04,96,308-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேர்த்தில் புதிதாக 120 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,54,823-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,51,460 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.