Type Here to Get Search Results !

23 மணி நேரத்தில் கடந்து வந்தார் சசிகலா..... ஒவ்வொரு மணிக்கும் 5 கோடியே 60 லட்சம் கோடி ரூபாய் செலவு....

 


பெங்களூருவில் இருந்து சென்னை வரை 420 கிலோ மீட்டர் தூரத்தை 23 மணி நேரத்தில் கடந்து வந்தார் சசிகலா. வழிநெடுக 120 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு, பெரும்பாலான தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த வரவேற்பு குறித்து அரசுக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டின் படி, சசிகலாவுக்கு 100 இடங்களில் வரவேற்பு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், 120 இடங்களில் வரவேற்பு கொடுத்துள்ளனர். பெங்களூருவில் துவங்கி வழிநெடுக லட்சக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சசிகலா புறப்படுவதற்கு ஒருவாரத்திற்கு முன்னரே தமிழகத்தில் இருந்து 500க்கும் அதிகமானோர் பெங்களூர் சென்று விட்டனர். அவர்கள் அவர்களுக்கான ரூம் வாடகை, சாப்பாடு செலவு, போக்குவரத்து செலவுகள், அமமுக பிரமுகர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. 

ஆயிரம் வரவேற்பு பேனர்கள் வைக்க திட்டமிடப்பட்டது. 942 பேனர்கள் வைக்கப்பட்டன. பெரும்பாலான பேனர்கள் பெங்களூரு மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு வரவேற்பு பாயிண்டுகளிலும் 200 கார்கள் சேர்ந்து கொள்ள வேண்டுமென்பது திட்டம். அதாவது 100 பாயிண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் கார்கள் பங்குபெற வேண்டும். அடுத்தடுத்த பாயிண்டுகளில் கார்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். விருப்பம் இருந்தால் பின் தொடரலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. டிவி ஒளிபரப்பில் சென்னை வரை நூற்றுக்கணக்கான கார்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும் என உத்தரவு போட்டிருந்தனர். சசிகலாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாக நாடு முழுவதும் காட்ட பெரும் தொகை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரவேற்பு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் பேர் வீதம் 120 இடங்களில் ஏறத்தாழ 1.20 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மட்டும் சாப்பாடு செலவு என 1,000 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 20 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் 200 கார்கள் வீதம் 24 ஆயிரம் கார்கள். அவற்றின் வாடகை, டிரைவர் பேட்டா செலவு என 20 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 942 பேனர்கள் வைக்க 50 லட்சம் ரூபாய். 10 லட்சம் போஸ்டர்களுக்கு 6 கோடி ரூபாய். வழிநெடுக மேளம், டப்பாங்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வர குரூப் என செலவு 10 கோடி. தமிழகம் முழுவதும் இருந்து 50 பஸ்களில் ஆட்களை அழைத்து வந்தனர்.

அவர்களுக்கான பேட்டா மற்றும் சாப்பாட்டுச் செலவு 12 கோடி. பஸ் வாடகை ஐந்து கோடி. வானவேடிக்கை, பூ,மாலை, இதர செலவுகள் இரண்டு கோடி. பெங்களூருக்கு முன்கூட்டியே வந்து தங்கிய உறவினர்கள் நண்பர்கள் 500 க்கும் அதிகமானோரின் ரூம் வாடகை, சாப்பாடு, போக்குவரத்து செலவு ஒரு கோடி. 22 மணிநேரம் வேறு நிகழ்ச்சிகளில் இல்லாமல் தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்ப 120 கோடி. இப்படி 23 மணி நேரத்தில் 196 5.10 கோடி செலவு செய்துள்ளனர். அதாவது ஒவ்வொரு மணிக்கும் 5 கோடியே 60 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.