Type Here to Get Search Results !

இன்று வெளியான மத்திய பட்ஜெட்டை தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டு…!

%25E0%25AE%2585%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%2588%2B%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%2581....%2B%25E0%25AE%258E%25E0%25AE%259F%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D இன்று வெளியான மத்திய பட்ஜெட்டை தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டு...!
பட்ஜெட் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
* இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், குறிப்பாக தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
* கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய நிதியுதவியை மேலும் உயர்த்தி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
* தமிழகத்தில் 3,500 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
* மதுரை – கொல்லம், சித்தூர் – தச்சூர் ஆகிய இரு வழித்தடங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ரூ.1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது தமிழக பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும்.
* சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும், கடல் பாசி உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி.
* தமிழகத்தில் உள்ள மற்ற சிறிய மீன்பாடி துறைமுகங்களின் மேம்பாட்டிற்கும் நிதியுதவி அளிக்க வேண்டும்.
* மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க தேவையான நிதியை, அதாவது தமிழகம் அரசு கோரியுள்ள 50 சதவீத பங்கு நிதியை உடனடியாக அளிக்க வேண்டும்.
* இன்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ லைட் மற்றும் மெட்ரோ நியோ திட்டங்களை கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் செயல்படுத்திட ஒப்புதல் அளிக்க வேண்டும்.
* நாடு முழுவதும் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதில் இரண்டு ஜவுளிப் பூங்காக்கள் தமிழகத்தில் (தென் மாவட்டங்களில் ஒன்றும், சேலத்தில் ஒன்றும்) அமைத்திட வேண்டும் கோரிக்கை வைக்கிறேன்.
* சர்வதேச நிதி நிறுவனத்தை தமிழகத்தில் ஏற்படுத்திட மத்திய அரசு திட்டம் அறிவிக்க கோரிக்கையை முன்வைக்கிறேன்.
* நகர பொது போக்குவரத்து அமைப்புகளின் மூலமாக ரூ.18 ஆயிரம் கோடி செலவில் 20 ஆயிரம் பேருந்துகளை புதிதாக வாங்கி போக்குவரத்துத் துறைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக அறிவித்துள்ள திட்டம் வரவேற்புக்குரியது.
* மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி (cess) மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் நிதிநிலையையும் பாதிக்கக்கூடியதாகும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று வெளியான மத்திய பட்ஜெட்டை தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டு…! appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.