மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 50,979.74 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.72 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.60 புள்ளிகள் உயர்ந்து 14,981.25 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.57 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 நிறுவனங்களில் அதிகபட்சமாக எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகின.
அதிகட்சமாக எஸ்பிஐ வங்கி 12.90 சதவிகிதமும், இந்துஸ் இன்ட் வங்கி 2.80 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.07 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.99 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
நேற்று உயர்ந்து காணப்பட்ட எம்& எம் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.