தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரோ தலைமையிலான குழுவினர் பிப். 10ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
இந்த குழுவினர் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி. - மாவட்ட தேர்தல் அதிகாரிகள் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.