2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.வாக நாஞ்சில் முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு இவர் மீது தாய், மகள் இருவரை சீரழித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்டப்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை திரும்பிய சசிகலாவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தவறு செய்தவர்கள்தான் நன்றி கெட்டவர்கள். விரைவில் அனைவரும் சசிகலா காலில் விழுவார்கள். நான் என்றும் சசிகலாவிற்கு உண்மையாக இருப்பேன். இன்று அவரை அவதூறாக பேசுபவர்கள் விரைவில் தேடி வருவார்கள் என தெரிவித்துள்ளார்.
உண்மை நாஞ்சில் முருகேச.....
நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர். அப்போது, முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்திருந்தார்.. இதையடுத்து எஸ்கேப் ஆகி, ஒரு தோட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த முருகேசனை 5 தனிப்படைகள் வைத்து தேடி, இறுதியில் கைது செய்தனர்.