100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பந்துவீசுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அஷ்வின் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.
இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்கியுள்ளது.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி தமது சொந்த மண்ணில் விளையாடுவதால், போட்டியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.