திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் தனியாக பல்கலைக் கழகம் உருவாக்கப்படவுள்ளது.
கல்லூரிகள் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தில் அமைக்கப்படும் பல்கலைக் கழகம் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றவுள்ளார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படவுள்ளது.