தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆழ்கடலில் மீன்பிடிகிறார்கள். அவர்களுக்காக வாக்கி டாக்கி வாங்கியதில் 300 கோடி ஊழல் நடந்திருப்பதா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வாங்கியதில் அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் முறைகேடு செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், அவர் மீது அவதூறு வழக்கு தொடர அரசாணை வெளியிடுப்பட்டுள்ளது. எனவே அவர் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்ய உள்ளார்.