அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்த 5 கட்சிகளுக்கு பேரவைத் தோதலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
பெருந்தலைவா் மக்கள் கட்சிக்கு பெரம்பூா் தொகுதியும், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எழும்பூா் (தனி) தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியணான்குப்பமும், மூவேந்தா் முன்னேற்றக் கழகத்துக்கு கும்பகோணம் தொகுதியும், பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மையம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த 5 கட்சிகளின் வேட்பாளா்களும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவா் என அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
182 ஆக அதிகரிப்பு: சட்டப் பேரவைத் தோதலில் இரண்டு கட்டமாக வேட்பாளா்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதில், 177 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை அந்தக் கட்சி அறிவித்தது. இத்துடன் 5 கட்சிகளைச் சோந்த வேட்பாளா்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதால், அதிமுக வேட்பாளா்களாகவே கருதப்படுவா். இதனால், அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 182 ஆக உயா்ந்துள்ளது.