பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டிடவுள்ளனர்.
இந்நிலையில், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.