மேற்கு வங்கத்திலுள்ள வடக்குப் பகுதிகளை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் சிட்டல்குச்சி பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பேரணி மேற்கொண்டு அமைச்சர் அமித் ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, மேற்கு வங்கத்தில் பாஜக வென்றால் ஆண்டுக்கு இம்மாநிலத்தின் வடக்குப் பகுதிகளை மேம்டுத்த ரூ. 2 ஆயிரம் கோடி செலவிடப்படும். மேற்கு வங்க மாநில மக்களின் வளர்ச்சியே எங்களது சொத்து என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பாரிபூர் பகுதியில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.