Type Here to Get Search Results !

தமிழ் புத்தாண்டு 2021…. சித்திரை மாத 12 ராசி பலன்கள்…..

 

மேஷம் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் உண்டாகும். தேவையற்ற பதற்றத்தை குறைப்பதன் மூலம் தலைவலி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். எதிர்பாராத சிறு இடமாற்றங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வாகனச்சேர்க்கையும், வாகனத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வழிபாடு :

முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும்.

ரிஷபம் :

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான நிறுவனங்களின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். சமயோகிதமாக செயல்பட்டு லாபங்களையும், செல்வாக்கையும் மேம்படுத்துவீர்கள். பேச்சுக்களில் நகைச்சுவையும், மதிநுட்பமும் வெளிப்படும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பலரிடத்தில் ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.

வழிபாடு :

விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பணப்பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் :

இதுவரை இருந்துவந்த உங்களின் மீதான கருத்துக்கள் மற்றும் எண்ணங்களில் மாறுபாடுகள் ஏற்படும். செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றங்களை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான, மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கையுடனும், தெளிவுடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிறு சிறு உபாதைகள் படிப்படியாக குறையும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் லாபமடைவீர்கள்.

வழிபாடு :

பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடகம் ராசி :

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான படிப்புகளில் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபவிரயங்களை செய்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப மாற்றங்களை செய்வீர்கள். அணிகலன் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

வழிபாடு :

விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.

சிம்மம் ராசி:

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகளும், ஆதரவான சூழ்நிலைகளும் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய காரியங்களில் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தாய்வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை தாண்டி வெற்றிகளை பெறுவீர்கள். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்களும், அதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்.

கன்னி ராசி:

வீடு, மனை வாங்கி விற்பது தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரமும், பொறுப்புகளும் மேம்படும். தாய்மாமன் உறவுகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாலின மக்களின் மூலம் நன்மை அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், லாபமும் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகளும், சேமிப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப இடமாற்றங்கள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு :

புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

துலாம் ராசி:

அரசு தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இடமாற்றங்கள் உண்டாகும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். மனைவியின் விருப்பங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சிகளை செய்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

வழிபாடு :

குலதெய்வத்தை வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சகம் ராசி:

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அளவுக்கு மீறி கடன் கொடுப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுதும், மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுதும் சிந்தித்து செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி:

போட்டித்தேர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தந்தைவழியில் இருந்து தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொன், பொருள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் கடினத்தன்மை குறைத்து கொள்வதன் மூலம் உங்களின் மீது புதிய நம்பிக்கையும், மாற்றங்களும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

வழிபாடு :

வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்துவர நன்மைகளும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் படிப்படியாக குறையும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். முயற்சிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விவசாயம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடமிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவும் பிறக்கும்.

வழிபாடு :

பைரவரை வழிபாடு செய்துவர எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கும்பம் ராசி:

பழைய மகிழ்ச்சியான நினைவுகள் மூலம் மனதில் நிம்மதி பிறக்கும். மனதில் சுதந்திர உணர்வும், எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் படிப்படியாக குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி அடைவீர்கள். சிலருக்கு வீடுகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

வழிபாடு :

மாரியம்மனை வழிபாடு செய்துவர எதிர்ப்புகள் விலகும் மற்றும் காரிய வெற்றி உண்டாகும்.

மீனம் ராசி:

அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பேச்சுக்களில் விவேகம் அவசியமாகும். விதண்டாவாத சிந்தனைகளையும், விவாதங்களையும் தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். மனை மற்றும் வாகனங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வழிபாடு :

நரசிம்மரை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.