கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறகு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது தான் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களம் காணப்போவதாக ரஜினி அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இந்தப்படி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்ணாத்த வெளியான பிறகு ரஜினி அரசியல் கட்சி துவங்குவார் என்று கருதப்பட்டது. இதனை அடுத்து படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள், வசனங்கள் சேர்க்கப்பட்டன.
பிறகு படம் பொங்கலுக்கு தள்ளிப்போன நிலையில் தேர்தல் நெருங்கிவிடும் என்பதால் வசனங்களில் கூடுதல் மசாலா சேர்க்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ரஜினி உடல் நிலை பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை அவர் கைவிட்டார். அதே போல் அண்ணாத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கிய போது வெறும் 10 நாட்கள் மட்டுமே சூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஐதராபாத்தில் தற்போதைய படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் என்கிறார்கள். இதற்கு காரணம் ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்ட சில காட்சிகள் நீக்கப்பட உள்ளது தானாம். அதிலும் குறிப்பாக அரசியல் ரீதியாக ரஜினி பேசிய வசனங்கள், அரசியல் தொடர்பான காட்சி அமைப்புகள், ரஜினியை ஒரு தலைவராக உருவகப்படுத்தி எடுக்கப்பட்ட பாடல்கள் போன்றவை தற்போதைய சூழலில் சிங்க் ஆகாது என்கிற முடிவிற்கு படக்குழு வந்துள்ளது. இது குறித்து ரஜினியிடம் இயக்குனர் சிறுத்தை சிவா பேசிய போது, அரசியல் ரீதியான எந்த காட்சி அமைப்பும் வேண்டாம் என்று அவரும் கூறிவிட்டதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து நீக்கப்பட உள்ள காட்சிகளுக்கு பதிலாக ரீ சூட் நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.