மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி புதிய நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வருமான வரி செலுத்துவது தொடர்பாக பல்வேறு புதிய மாற்றங்கள் அறிவித்தார். அந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளால், என்னென்ன மாற்றங்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வருமான வரித்தாக்கல், திருத்தப்பட்ட ஐ.டி.ஆர்
வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலவகாசத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாமல் இருந்தால் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அபராதத்துடன் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

ஒருவேளை முன்கூட்டியே வருமான வரியை செலுத்தியிருந்து, அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அபராதம் இல்லாமல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தலாம். தற்போது அந்த திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை(Revised ITR) செலுத்துவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்த அதே நிதியாண்டில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ULIP வருவாய்க்கு வரி
பங்குச் சந்தை சார்ந்த ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்து, அதில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வட்டி வருவாய் வந்தால், அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் வந்தால் வரி செலுத்த தேவையில்லை. இதற்கு முன்னர், யூலிப் திட்ட வருவாய்க்கு 3 விதமான வரிச் சலுகை கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய வரி vs பழைய வரி
கடந்த பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அரசு புதிய வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்தது. பழைய வரி விகித நடைமுறையும் தொடரும் என அறிவித்த மத்திய அரசு, வரி செலுத்துவோர் தங்களுக்கு பொருத்தமான முறையை தேர்வு செய்து கொள்ளும் சலுகையையும் அளித்துள்ளது. அதிகமான வரி செலுத்துபவராக இருந்தால், இந்த இரண்டு முறைகளில் உங்களுக்கு உகந்ததை தேர்தெடுத்து, வரி பிடித்தம் மற்றும் வரி விலக்குகளில் இருந்து முறையாக விண்ணப்பித்து சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.
இ.பி.எஃப் வட்டிக்கு வரி
ஊழியர் ஒருவருக்கு பிடித்தம் செய்யப்படும் 12 விழுக்காடு பி.எப் தொகையுடன், விருப்ப தொகையாக செலுத்தும் பணத்தின் மதிப்பு 2. 5 லட்சம் ரூபாயைக் கடந்தால், அந்த தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒருவேளை நிறுவனம் தரப்பில் இருந்து 12 விழுக்காடு தொகை பங்களிப்பு செய்யாமல் இருந்தால், 5 லட்சம் வரையிலான தொகைக்கு ஊழியர் விலக்கு கோரலாம்.
டிவிடெண்ட் வரி
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடுகளில் செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு, நிறுவனம் குறிப்பிட்ட தொகையை டிவிடெண்டாக வழங்கும். அந்த தொகைக்கான வரியை முன்னர் நிறுவனங்கள் செலுத்தி வந்தன. தற்போது அந்த நடைமுறையை மாற்றி அமைத்துள்ள மத்திய அரசு, டிவிடெண்ட் வருவாய் பெறும் நபர், தங்கள் வருமானத்தில் சேர்த்து அதற்கான வரியை செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிவிடெண்ட் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டும். வரிக்கழிப்பு(TDS) ஏதேனும் இருந்தால், அந்த தகவல் 26 AS-ல் இடம்பெறும்.