Type Here to Get Search Results !

திமுக அரசின் சாதனை கடந்த பத்து நாட்களில் 100 ரூபாய் அளவிற்கு சிமெண்ட் விலை ஏற்றம்

கடந்த பத்து நாட்களில் 100 ரூபாய் அளவிற்கு சிமெண்ட் விலை ஏற்றம் கண்டுள்ளது இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சென்ற ஏப்ரல் மாதம் வரை சிமெண்ட் தயாரிப்புகளின் விலையே 360 முதல் 420 வரை என தயாரிப்பு முறை, தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை மதிப்பு கொண்டு விற்பனை ஆகி வந்தது. இதனால் சிமெண்ட உபயோகப்படுத்தும் வீடு கட்டும் மக்கள், பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள், சிறு, குறு வியாபாரிகள் நிறைய வியாபாரத்தில் பயனடைந்து வந்தனர். தரம் சுமாராக உள்ள சிமெண்டு விலை 360 எனவும் தரம் மற்றும் தயாரிப்பு கம்பெனியை வைத்து சில சிமெண்ட் மூட்டையின் விலை 420 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த பத்து நாட்களாக சிமெண்ட் சிமெண்ட் விலை குறைந்தபட்சம் 410 எனவும் அதிகபட்சம் 500 எனவும் விலை ஏற்றமடைந்துள்ளதால் இதன் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வெறுப்படைந்துள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு காரணத்தினால் வியாபாரிகள், மக்கள் வருமானம் குறைந்து சிரமப்பட்டு வரும் நிலையில் இப்படி கட்டுமான அத்தியாவசிய பொருளான சிமெண்ட்’டின் விலை கிட்டதட்ட 100 ரூபாய் வரை மூட்டைக்கு உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

தி.மு.க அரசு இதனை உடனடியாக தலையிட்டு விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் விரும்புகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.