Type Here to Get Search Results !

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை…. 12 மணி நிலவரப்படி

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி 9 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூா் அரசு கலைக் கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.