Type Here to Get Search Results !

14.05.2021 அட்சய திருதியை… விரதம் இருப்பது எப்படி…? யாரை வழிபட வேண்டும்…?

 

14.05.2021 அட்சய திருதியை… விரதம் இருப்பது எப்படி?

நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தங்கம் வாங்க இயலாதவர்கள் அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும்.

யாரை வழிபட வேண்டும்?

இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து விரதமிருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வத்தை பெற்று சிறப்பான வாழ்க்கையை பெற்றிடலாம்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை வாங்கி அந்த வாகனங்களினால் லாபங்களை அடைந்தவர்களும் உண்டு. அதே வாகனங்களால் நஷ்டங்களை அடைந்தவர்களும் உண்டு.

வாகனங்கள் வாங்கும்பொழுது, அந்த வாகனங்களினால் நமக்கு நன்மை ஏற்படுவதற்கு வாகனம் வைத்திருக்கும் நபரின் பிறந்த தேதி, பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு ஏற்றாற்போல் அந்த வாகனத்தின் மொத்த கூட்டு எண் அமையும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

விரதம் இருப்பது எப்படி?

அட்சய திருதியை நாளன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். கோலம் போட்டபின் அதன்மேல் ஒரு பலகை வைத்து அதில் கோலமிடுங்கள். அதில் வாழை இலையை போட்டு, அதன் நடுவே பச்சரிசியை பரப்பி, அதன்மேல் செம்பில் நீர் நிரப்பி, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக அமைத்திடுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள்.

லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். பின்னர் காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு வாழையிலையில் வலப்பக்கம் வையுங்கள்.

நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். முதலில் விநாயகரை மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

அன்றைய தினம் மாலையில் கலசத்துக்கு மீண்டும் தூப தீப ஆராதனையை காட்டி, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

அட்சய திருதியை நாளில் பயன்படுத்திய அரிசி, கலச தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது விட முக்கியமானது தானமளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.