Type Here to Get Search Results !

ஏழு தமிழர், ஏழு தமிழர் என்று குரலெழுப்பி விட்டு பேரறிவாளனை மட்டும் அடிக்கடி பரோலில் விடுவது ஏன்…? ஸ்டாலிக்கு நாராயணன் திருப்பதி கேள்வி பதிலை சொல்லுங்க பாஸ்….!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதற்கிடையில் பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உயர்நீதிமன்றம் சில முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்த பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு பரோல் வழங்கவும் கோரிக்கை  வருகிறது.அந்த வகையில், சிறையில் உள்ள பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால்,
அவருக்கு தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரறிவாளன் நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார்   (மே 18) முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார் அதில் 
ஏழு தமிழர், ஏழு தமிழர் என்று குரலெழுப்பி விட்டு பேரறிவாளனை மட்டும் அடிக்கடி பரோலில் விடுவது ஏன்? இது வரை 30 வருடங்களில், ராபர்ட் பயஸ், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் ஒரு முறை  கூட பரோலில்  விடுவிக்காதது ஏன்? இது வரை அடிமை அரசு என்று சொன்னீர்களே? இப்போது இருப்பது ஆண்மையுள்ள தி மு க அரசு தானே? முழுக்க முழுக்க மாநில  அதிகாரத்தில் இருக்கும் பரோலில் ஏன் விடுவிக்கவில்லை? தமிழர்களிடையே பாரபட்சம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆமாம் பேரறிவாளன் மட்டும்தான் தமிழரா? மற்றவர்களை பற்றி ஏன் இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது, இதற்கு திமுக தரப்பில் பதில் இருக்க என்ற கேள்விகளும் பொது வெளியில் எழுந்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.