வங்கதேசத்தில் இதுவரை 5.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,981 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், புனே சீரம் நிறுவனம் தயாரித்துள்ள, 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை, வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆன்லைனில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் பேசியதாவது: கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்த, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவிடமிருந்து மேலும் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது. அது விரைவில் கொள்முதல் செய்யப்படும் என நம்புகிறேன். கொரோனா சூழலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி first appeared on தமிழ் செய்தி.
The post வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி appeared first on தமிழ் செய்தி.