நம் நாட்டின், 71வது குடியரசு தினம், 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லி ராஜபாதையில், நாட்டின் பெருமையை பறை சாற்றும் வகையில், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடக்கவுள்ளது. ராணுவத்தின், 861 ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்கிறது.
சமீபத்தில், ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற, 861 ஏவுகணை பிரிவு வீரர்கள், ‘துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்’ ஆகிய கோஷங்களுடன், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். தீய சக்திகளை அழிக்க, புலியின் மீது, வில் மற்றும் அம்புடன் அமர்ந்துள்ள கடவுள் அய்யப்பனுக்கு செய்யப்படும் மரியாதையாக, இந்த சரண கோஷம் கருதப்படுகிறது.
இதையடுத்து, டில்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில், ‘துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்களுடன், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ கோஷத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனால், குடியரசு தின அணிவகுப்பில், இந்த முறை, ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ கோஷத்தைக் கேட்கலாம்.
The post தீய சக்திகளை அழிக்க… குடியரசு தின அணிவகுப்பில் ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ கோஷம் first appeared on தமிழ் செய்தி.
The post தீய சக்திகளை அழிக்க… குடியரசு தின அணிவகுப்பில் ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ கோஷம் appeared first on தமிழ் செய்தி.