Type Here to Get Search Results !

பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்…. எல்.முருகன் பேச்சு

அதிமுக தலைமை அதன் கூட்டணி கட்சிகளுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து பாஜக காத்திருக்கிறது. இன்னொரு புறம் கட்சி நிர்வாகிகள் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் பணிகளிலும் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சொந்த ஊர் மற்றும் மாவட்டமான ராசிபுரம், நாமக்கல் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சென்னையில் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக தற்போது தேர்தல் களத்தைத் தயார் செய்துகொண்டிருக்கிறது. பாஜக தேசியத் தலைமை நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினால் நான் நிச்சயமாகப் போட்டியிடுவேன். அப்போது எந்தத் தொகுதி என்பதும் முடிவாகிவிடும். விரைவில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. பாஜக சார்பில்  போட்டியிட விருப்ப மனு வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.” என்று எல்.முருகன் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.