Type Here to Get Search Results !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு…. அமைச்சர் ஜெயக்குமா

சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உரிய நேரத்தில் கட்சித் தலைமை தொகுதிப் பங்கீடு விவரத்தை துறைப்படி அறிவிக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே உடைந்து விடும்.
திமுக- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. சசிகலா எந்த முடிவு எடுத்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களின் ஒரே முடிவு அனைவரும் ஒற்றுமையாக இருந்து அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம். மேலும், இரண்டாம் கட்டப்பணிகள் நிறைவடைந்த பிறகே, ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்றார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.