தேர்தல் வாக்குறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்… மிரட்டும் செந்தில்பாலாஜி…! pic.twitter.com/PqhGwvGYdD
— தமிழ் செய்தி (@Tamil_News_one) March 20, 2021
இந்தக் கூட்டத்தில் கட்சியினரிடையே திமுக மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பேசும்போது, “தேர்தல் வாக்குறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன். அடுத்து திமுகஆட்சி அமைந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று, அதாவது 11 மணிக்குமுதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டாரென்றால், 11.05 மணிக்கு மாட்டு வண்டியை நீங்களாகவே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்.
அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரிஇங்க இருக்க மாட்டான்” என்றார்.
செந்தில் பாலாஜியின் இந்த பேச்சு இடம்பெற்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பலரும் செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது, “திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் அரசுமணல் குவாரி அமைத்து மணல்அள்ளப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படாத காரணத்தால், 15 ஆயிரம்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர்.
இங்குள்ள அமைச்சரின் கிரஷரில் எம்.சாண்ட் விற்பனை பாதிக்கும் என, ஒரு சில அதிகாரிகள் மணல் எடுக்க அனுமதி வழங்கவில்லை. தவறு செய்யும் ஒரு சிலஅதிகாரிகளை எச்சரிக்கும் விதமாகவே, அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள் என எச்சரித்தேன். இதை விஷமத்தனமாக சிலர் சித்தரித்து, எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.
நான் தெரிவித்த கருத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கண்டனம் தெரிவித்துள்ள மநீம, புகார் அளித்துள்ள பாஜக, அதிமுகவேட்பாளர்கள் உள்ளூர் தேவைக்குமாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்க முடியாது என பிரச்சாரத்தில் கூறத் தயாரா?
மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளூர் தேவைக்கு மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி கேட்டுஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததில், மணல் எடுக்கும் இடங்களை கண்டறிய நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அனுமதி வழங்கப்படாதது ஏன்?. இரு மாவட்டங்களில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,கரூர் மாவட்டத்தில் மணல்எடுக்க அனுமதி வழங்காதது ஏன்? 15 ஆயிரம் குடும்பங்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், எம்எல்ஏ என்ற முறையில் அவர்களுக்காக குரல் கொடுத்தேன் என்றார். செந்தில் பாலாஜியின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.