ஸ்டாலின் தான் வாராரு, அல்வா கொடுக்க போறாரு என்பது தான் நிதர்சனம் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசுகையில், ” .
ஏழைகளின் முதல்வராக, விவசாயிகளின் தோழரான, விவசாயி தமிழக முதல்வராக இருக்கிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கிறது. நமது நோக்கம் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க வெற்றியை தர வேண்டும்.
மு.க ஸ்டாலின் வராரு விடியல் தர போறாரு என்பதெல்லாம் மக்கள் அறிந்த பொய் என்பது மு.க ஸ்டாலினுக்கே தெரியும்.
ஸ்டாலின் தான் வாராரு, அல்வா கொடுக்க போறாரு என்பது தான் நிதர்சனம். திமுக ஆட்சிக்கு வந்தால் காய்ந்த மாடு கம்பங்காட்டில் பாய்ந்த கதை தான்.
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் கூட்டணி அதிமுக கூட்டணி. யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். திமுக ஒருகாலத்திற்கும் ஆட்சிக்கு வரக்கூடாது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தையே நாசம் செய்துவிடுவார்கள் ” என்று பேசினார்.