கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் – பாஜக – அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கை
* விண்ணப்பித்த 15 நாட்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு
* புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்.
* புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்.
* சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்படும்.
* தொழில், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் செயல்பாட்டை உறுதிசெய்ய உயர்மட்ட குழு
* அனைத்து பஞ்சாலைகளும், கூட்டுறவு மில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.
* கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
* ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும்
* எந்த ஆன்மிக வழிபாட்டு தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது.