Type Here to Get Search Results !

மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு……

மேற்குவங்க மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திரிணமூல் கட்சியினரால் பாஜகவை சேர்ந்த 130 தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 732 கம்பெனி மத்திய ஆயுதப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக சிறப்பு காவல் பார்வையாளர் விவேக் துபே தெரிவித்துள்ளார்.  
மேலும், 30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2016 தேர்தலில், இந்த 30 தொகுதிகளில் 27ல் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், முதல்கட்டமாக 27ஆம் தேதியும், இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும், வாக்கெண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.