Type Here to Get Search Results !

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான்…. எடப்பாடியார்

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, ஸ்டாலின் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் பேசி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இதுபோல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். அதிமுக அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் ஊழல் செய்யவில்லை. கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்கின்ற கட்சி இந்தியாவிலேயே திமுக கட்சி தான். 
முதலில் திமுக தமிழ்நாட்டில் தான் கொள்ளையடித்தார்கள். பின்னர் இந்தியா முழுவதும் கொள்ளையடித்தார்கள். இதனால் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துவிட்டனர் திமுகவினர். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான். 13 முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர்கள் வாய்தா வாங்கி கொண்டு இருக்கிறார்கள். 
அடுத்தது திமுக கட்சியில் தன்னுடைய மகனை கொண்டு வர ஸ்டாலின் ஒரு முடிவு எடுத்து விட்டார். இப்படி பேசினால் தான் எடப்பாடி பழனிசாமி திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கின்ற வழக்குகளை விரைந்து முடிப்பார். இதனால் திமுகவின் சீனியர் தலைவர்கள் எல்லாம் சிக்கலுக்கு உள்ளார்கள். தனது மகன் உதயநிதிக்கு எளிதில் ரூட்டு போட்டு கொடுக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். 
அதற்காகத் தான் எங்கள் மீது பழி போட்டு கொண்டிருக்கிறார். நான் ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். எங்கள் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நேருக்கு நேர் விவாதிப்போம். நான் அதற்கு பதில் சொல்ல தயார். திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் செய்த குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில் சொல்லத் தயாரா. இல்லாத பொய்யை சொல்லி எங்களை களங்கப்படுத்த நினைக்கிறார். 
பொய் வென்ற வரலாறு கிடையாது. உண்மையே என்றும் வெல்லும். நான் ஆட்சி பொறுப்பு எற்றபோது, எடப்பாடி பழனிசாமி கிராமத்திலிருந்து வந்திருக்கிறார். இவருக்கு ஒன்றும் தெரியாது. இந்த ஆட்சி 1 மாதத்தில் போய்விடும், 3 மாதங்களில் போய்விடும், 6 மாதங்களில் போய்விடும் என்று ஸ்டாலின் சொல்லி கொண்டிருந்தார். ஒன்றும் நடக்கவில்லை. 
நாடாளுமன்ற தேர்தலோடு நடந்த இடைத்தேர்தலிலும் மக்கள் அண்ணா திமுகவிற்கு வாக்களித்து எங்கள் ஆட்சி தொடர வேண்டுமென்று முடிவு எடுத்தார்கள். அதனை அடுத்து திமுகவிடமிருந்த விக்கிரவாண்டி காங்கிரசிடமிருந்த நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிலும் அண்ணா திமுக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் அண்ணா திமுக அரசாங்கம் தான் இருக்க வேண்டும் என்று உறுதிபடுத்திவிட்டார்கள் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.