Type Here to Get Search Results !

பாஜக… திமுகவை இன்னமும் கலக்கத்தில் வைத்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா….?

 

தமிழகத்தில் வலிமையே இல்லாத பாஜக, பலம் பொருந்திய திமுகவை இன்னமும் கலக்கத்தில் வைத்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? பாஜகவால் இங்கு நேரடியாக திமுகவுடன் மோத முடியாது என்பதால், எந்த வகையில் எல்லாம் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ, அவ்வளவு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

திமுகவுக்கு மட்டுமில்ல, கூட்டணியில் இருக்கும் அதிமுகவே எந்த நேரமும் உஷார் மோடில் தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாஜகவை பொறுத்தவரை இங்கு அவர்கள் எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை விட, திமுக எத்தனை தொகுதிகளில் தோற்க போகிறார்கள் என்பதே அவர்களது பிரதான டார்கெட். ‘திமுகவை ஒவ்வொரு தொகுதி வாரியாக தோற்கடிப்பது எப்படி?’ என்ற தனி கிரவுண்ட் ஒர்க்கே இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

காரணகர்த்தா பாஜக

அதிமுக கூட்டணியில் மொத்தம் 23 தொகுதியில் போட்டியிடுகிறது பாமக. இதில் செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், வந்தவாசி, பென்னாகரம், தருமபுரி, திருப்பத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, கும்மிடிப்பூண்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, பூந்தமல்லி(தனி), ஆற்காடு, காஞ்சிபுரம், நெய்வேலி, ஆத்தூர், சங்கராபுரம், கீழ்பென்னாத்தூர் ஆகிய 18 தொகுதிகளில் பாமக vs திமுக மோதுகிறது. இந்த சீட் டீலிங்கில் முக்கிய காரணகர்த்தவாக இருந்தது பாஜக தான் என்று கூறப்படுகிறது.

இட ஒதுக்கீடு

காரணம், அந்த ஒரேயொரு விஷயம் தான். ஆம்! வன்னியர்களுக்கன 10.5% உள் இட ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவை கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது தமிழக அரசு. பக்காவாக வன்னியர் ஓட்டுக்களை டார்கெட் செய்யும் நோக்கிலான இந்த அசைன்மெண்ட்டுக்கு பின்னாலும் பாஜகவே இருப்பதாக நம்பப்படுகிறது.

பாமக தலைமையிடம்

இந்த நிலையில், 6 சாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரால் அழைக்க வகை செய்யும் மசோதா, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நள்ளிரவில் டெல்லியில் இருந்து ஏகப்பட்ட ஆலோசனைகள் (உத்தரவுகள்) கூட்டணி கட்சிகளுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த ஆலோசனையில் மிக முக்கியமான அம்சமாக, ‘திமுக vs அதிமுக’ என்பதை விட, ‘திமுக vs பாமக’ என்பதையே நாங்கள் பெரிதாக எதிர்பார்க்கிறோம் என்று பாமக தலைமையிடமே ஸ்ட்ரெய்ட்டாக தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

கையில் ஆயுதம்

குறிப்பாக, ‘வன்னியர்கள் இட ஒதுக்கீடு’ அறிவிப்பை பயன்படுத்தி, கண்டிப்பாக திமுகவை 15 தொகுதிகளிலாவது நீங்கள் தோற்கடிக்க வேண்டும் என்று சற்று அழுத்தம் திருத்தமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ‘உங்கள் கையில் மிகப்பெரிய ஆயுதம் உள்ளது. அதை வைத்து எதிரியைத் தாக்குங்கள்’ என்ற சில தத்துவ ரீதியிலான சான்றுகளும் தெரிவிக்கப்பட, அத்தனை விஷயத்தையும் பொறுமையாக கேட்டு தலையாட்டி இருக்கிறதாம் பாமக தலைமை.

முதல் ‘டீல்’

இதில், பாஜக காட்டிய புத்திசாலித்தனம் என்னவென்றால், பாமகவை, திமுகவோடு மோத விட்டது தான். எப்படி என்கிறீர்களா? அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ‘எங்களை பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுங்க, கூப்பிடுங்க’ என்று அவ்வளவு கூப்பாடு போட்டும், துளி கூட அசைந்து கொடுக்காத அதிமுக முடித்துக் கொடுத்த முதல் ‘டீல்’ பாமகவுடன் தான். தொகுதிப் பங்கீட்டில் பாமகவுக்கு தான் செட்டில்மெண்ட்டை முதலில் முடித்தது அதிமுக. அதில் எந்த சிக்கலும் இல்லாமல், எந்த இழுபறியும் இல்லாமல், எந்த குழப்பமும் இல்லாமல் ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ மோடில் சீட் உடன்பாடு முடிவு செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.