மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஷஷிகாந்த் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மண்டேலா படத்தைப் பாராட்டி ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
31 வயது ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, இதுவரை 31 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருட ஐபிஎல்லில் இரு ஆட்டங்களில் விளையாடினார்.
ட்விட்டரில் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியதாவது:
சில நாள்களுக்கு முன்பு மண்டேலா படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்தேன். யோகி பாபுவின் அபாரமான நடிப்பைக் கண்டு வியந்தேன். என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை! (தமிழக வீரர்) நடராஜனின் நண்பர் என்பதை அறிந்தேன். அவர், யோகி பாபுவிடம் விடியோ காலில் என்னைப் பேச வைத்தார் என்று கூறியுள்ளார்.