மேற்கு வங்க தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
முதற்கட்ட வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 292 தொகுதிகளில் 267 தொகுதிகளில் வாக்கெண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
அதில், திரிணமூல் கூட்டணி 147, பாஜக கூட்டணி 115, சிபிஎம் கூட்டணி 3, பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அசாம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 196 தொகுதிகளில் 94 தொகுதிகளில் வாக்கெண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.
அதில், பாஜக கூட்டணி 60, காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கேரளம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 140 தொகுதிகளில் 137 தொகுதிகளில் வாக்கெண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.
அதில், மார்க்சிஸ்ட் கூட்டணி 77, காங்கிரஸ் கூட்டணி 58, பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.