இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 3,689 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
புதிதாக 3,92,488 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து 11-வது நாளாக தினசரி பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சனிக்கிழமை 4 லட்சம் பாதிப்புகளைத் தாண்டிய நிலையில் இன்று 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதேபோல், தொடர்ந்து 5-வது நாளாக தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.
இதன்மூலம், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,95,57,457 ஆக உயர்ந்துள்ளது. இதில் 33,49,644 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,15,542 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,07,865 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,59,92,271 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 18,26,219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 15,68,16,301 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.