அதிமுக அமைச்சர்கள் 15 பேர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். 8 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
எடப்பாடி கே பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதேபோன்று ஓ.எஸ். மணியன், கே.ராதாகிருஷ்ணன், கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் முன்னிலை வகிக்கின்றனர்.
ஜெயக்குமார், எம்.சி.சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, அமைச்சர் காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
பாலக்கோடு தொகுதியில் அதிமுக அமைச்சர் அன்பழகன் 16,871 வாக்குகள் பெற்றுள்ளார். திமுகவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முருகன் 14,086 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால் 2,787 வித்தியாசத்தில் அன்பழகன் முன்னிலை பெற்றுள்ளார்.
விராலி மலை தொகுதியில் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் 8,382 வாக்குகள் பெற்றுள்ளார். திமுகவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.பழனியப்பன் 5,010 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால் 3,372 வித்தியாசத்தில் அன்பழகன் முன்னிலை பெற்றுள்ளார்.