அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
இதில், தாராபுரம் (தனி) தொகுதியில் பா.ஜ., மாநில தலைவர் முருகன் போட்டியிட்டார். இங்கு நேரடியாக, தி.மு.க.,வுடன் மோதுவதால் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. வி.ஐ.பி., தொகுதியாக களமாறியது.
இச்சூழலில், முருகன் முதல் சுற்றில், 4,218 ஓட்டு பெற்றார். இரண்டாம் சுற்றில், 8,353 ஓட்டு பெற்றார். தி.மு.க., வேட்பாளர் கயல்விழியை விட, 1,750 ஓட்டு கூடுதலாக பெற்று முன்னிலை வசிக்கிறார். இதேபோல், துறைமுகம், உதகமண்டலம், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.