நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வழக்கம்போல முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தங்கு தடை இன்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளது. வழக்கம் போல முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது அதை எடுத்து மின்னணு வாக்கு பட்டியலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளது. காலை 9:30 மணிக்கு முதல் சுற்று ரிசல்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 5,64, 253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு 3,30,380 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு இரண்டு மடங்கு தபால் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளது. இந்நிலையில் தபால் வாக்குகளை என்ன 4 மேஜைகளில் இன்னும் வாக்குகளை என்ன 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. தபால் வாக்குகளை பொறுத்தவரையில் யார் முன்னிலை என்பது சற்று நேரத்தில் தெரியும்.
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை… ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இருந்து வெளியான அதிர்ச்சி தகவல்…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள போதும், 11 மணிக்கு தான் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றை சமர்ப்பித்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர அவர்களின் உடல் வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானால் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதிய அதிகாரியாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.