கேரளம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. கடந்த மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தல் நடைபெற்றது. நிலையில், வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.
இந்தப் பணியில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்தல் அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். 30,281 போலீஸாரும், 3,332 மத்திய படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முதல்கட்டத் தகவல் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், மாலை 5 மணி வாக்கில் தோ்தல் முடிவுகள் ஓரளவுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி டீகாராம் மீனா தெரிவித்தாா்.
மொத்தம் 140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில், இந்த முறை பாஜகவும் களமிறங்கியுள்ள நிலையில், கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்பொழுது 53 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும். பாஜக 1 இடத்திலும் முன்னணி வகிக்கிறது.
கேரளாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரபைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.