பிரதமர் நரேந்திர மோடி,டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் சனிக்கிழமையன்று சென்றுள்ளார்.
சீக்கியர்களின் 9வது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி குருத்வாராவின் சிஸ் கஞ்ச் சாஹிப் பகுதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.ஆனால்,எந்தவித சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பிரதமர் மோடி குருத்வாராவுக்கு சென்றுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது,”குரு தேக் பகதூரின் 400 வது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியில், நான் ஸ்ரீகுரு தேக் பகதூர் ஜியை வணங்குகிறேன்.குருவின் தைரியம் மற்றும் நலிந்தவர்களுக்கு சேவை செய்த அவரது முயற்சிகளுக்காக உலகளவில் மதிக்கப்படுகிறார்.அதுமட்டுமல்லாமல்,கொடுங்கோன்மைக்கும் அநீதிக்கும் தலைவணங்க குறு தேக் மறுத்துவிட்டார்.மேலும்,குரு தேக்கின் உச்ச தியாகமானது பலருக்கு பலத்தையும் உந்துதலையும் தருகிறது”,என்று கூறி குடிமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.