இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,91,64,969 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 2,99,988 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 32,68,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.