சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இதுவரை நடந்து முடிந்த 10 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே பழனிசாமி 56,252 வாக்குகளும் அவரை அடுத்து வரும் திமுக வேட்பாளர் த. சம்பத்குமார் 20,803 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே பழனிசாமி 35449 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.