வால்பாறையில் அதிமுக வேட்பாளர் தி.க. அமுல் கந்தசாமி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் 53,309 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
முதல் சுற்று முதலே முன்னிலை வகித்து வந்த அமுல் கந்தசாமி 66,474 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
தேமுதிகவின் எம்.எஸ்.செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில் ராஜ், நாம் தமிழர் கட்சியின் கோகிலா ஆகியோர் குறைந்த வாக்குகளையே பெற்றனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.