”மேற்கு வங்கத்தில் எங்கள் தொண்டர்களின் கடின உழைப்பால், பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. தொடர்ந்த எங்கள் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் அங்கு பரப்புவோம்,” என, பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பா.ஜ.க 77 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தெரிவித்த நிலையில், 100 இடங்களில்கூட வெல்லவில்லை.
தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
மேற்கு வங்க மக்கள் அளித்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்கிறோம். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் திலிப் கோஷ்க்கும், அவரின் கடின உழைப்புக்கும் நன்றி.
இது பா.ஜ.க தொண்டர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி, பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க முன்னேறியுள்ளது. தங்க வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பா.ஜ.க உழைக்கும். பா.ஜ.க தனது சித்தாந்தத்தை மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்கும். அசாம், புதுச்சேரி, தமிழகம், கேரளாவிலும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
We accept the results & I thank the people of Tamil Nadu for improving BJP’s tally in the assembly. In the elections, @Murugan_TNBJP & @BJP4TamilNadu Karyakartas made relentless efforts. NDA continues to stand committed for the holistic development of the State.
— Jagat Prakash Nadda (@JPNadda) May 2, 2021