தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எச் ராஜா முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி காரைக்குடியில் பாஜக சார்பில் எச் ராஜா களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாங்குடி போட்டியிட்டுள்ளார்.
இந்த நிலையில் எச் ராஜா தபால் வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த தேர்தலில் எச் ராஜா வென்றால் 20 ஆண்டுகள் கழித்து எம்எல்ஏவாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல் போட்டியிட்டு வென்றவர் எச் ராஜா.