தாராபுரம் தனி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.
தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தமிழகத்திலும் சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டன.
இதில் தற்போதைய நிலவரப்படி, அதிமுக 61 இடங்களிலும், திமுக 84 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
தாராபுரம் தனி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தபால் வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார்.
வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், திமுக வேட்பாளரான கயல்விழி செல்வராஜை விட 797 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
எல்.முருகன் (பாஜக) பெற்ற வாக்குகள்: 4,218
கயல்விழி செல்வராஜ் (திமுக):3,421