Type Here to Get Search Results !

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறை…. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த கோரிக்கை…!

மேற்கு வங்கத்தில் அண்மை யில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இங்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெருமளவில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ்’ என்ற அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சியினருக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது. இதில் எதிர்க்கட்சியினர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு வீச்சு, கொலை, கொள்ளை, கடத்தல், தீவைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், பெண்களுக்கு எதிரான தாக்குதல், பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் நிகழ்கின்றன.
வன்முறையாளர்களை மாநிலநிர்வாகமும் காவல் துறையினரும் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். பல்வேறு தரப்பு கோரிக்கைகள் மற்றும் வன்முறை செய்திகளுக்கு பிறகும் அங்கு அமைதியை பாராமரிக்க மாநில நிர்வாகம் தவறிவிட்டதால் அப்பாவி மக்களை காக்க உச்ச நீதிமன்றம் உடனே தலையிட வேண்டும். வன்முறை பாதித்த இடங்களில் மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வழிவகுக்கும் வகையில், அங்கு அரசியலைப்பு இயந்திரம் செயலிழந்துள்ளதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமுல் அராஜகம் : பா.ஜ.க வினர் மீது தாக்குதல்

கோல்கட்டா ;மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான, 24 மணி நேரத்திற்குள், திரிணமுல் காங்., தொண்டர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, 12க்கும் மேற்பட்டோர்பலியாகினர்.
மாநில சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து, வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, நிலைமையைகட்டுக்குள் கொண்டு வருவது குறித்து, கவர்னர் ஜக்தீப் தன்கருடன், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.மேற்கு வங்கத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ., 77 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, இன்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார்.இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான, 24 மணி நேரத்திற்குள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது.
தீக்கிரை
பா.ஜ., – திரிணமுல் காங்., தொண்டர்கள் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. இதில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், 12 பேர் உயிரிழந்ததாகவும், தொண்டர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், திரிணமுல் காங்., தொண்டர்களால் சூறையாடப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, திரிணமுல் காங்., தொண்டர்கள் ஐந்து பேர், கலவரத்தில் உயிரிழந்ததாக, அக்கட்சி தெரிவித்தது. இந்த அரசியல் வன்முறை சம்பவங்கள் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, மம்தா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கம், அமைதியை விரும்பும் மாநிலம். தேர்தல் சமயத்தில், பா.ஜ.,வினரும், மத்திய ஆயுத படையினரும் கடும் தொல்லைகள் கொடுத்தனர். பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு, பின் அடங்கியது.அனைவரும் அமைதி காக்க வேண்டும். தயவு செய்து வன்முறையில் ஈடுபடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.சட்டம் – ஒழுங்கு குறித்து, உயர் அதிகாரிகளுடன், முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:வெற்றி பெற்ற பிறகும் திரிணமுல் காங்., ஏன் வன்முறையில் ஈடுபடுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், அலுவலகங்கள், கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை எனில், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று கோல்கட்டாவுக்கு வந்தார். வன்முறை சம்பவங்களை கண்டித்து, பா.ஜ.,வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் மற்றும் முதல்வர் மம்தா ஆகியோரை, மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர், நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதற்கிடையே, கவர்னர் ஜக்தீப் தன்கரை தொலைபேசி வாயிலாக அழைத்து, சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
கவலை
கவர்னர் ஜக்தீப் தன்கர் தனது, ‘டுவிட்டர்’ சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ள வன்முறைகள் குறித்தும், சட்டம் – ஒழுங்கு நிலை குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.வன்முறை, காழ்ப்புணர்ச்சி, படுகொலைகள், தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளை மற்றும் கொலைகள் தடையின்றி தொடர்வது குறித்து, பிரதமருடன் பகிர்ந்து கொண்டேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, மம்தா போட்டியிட்டு தோல்வி அடைந்த நந்திகிராம் தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும், இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கங்கனா கணக்கு முடக்கம்!
மேற்கு வங்கத்தில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 34, தன் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், சில கருத்துகளை பதிவிட்டார். வெறுப்புக்குரிய கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டதாக கூறிய டுவிட்டர், அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இது குறித்து கங்கனா கூறும்போது, ”டுவிட்டர், ஒரு தரப்புக்கு சார்பாக செயல்படுகிறது. என் கருத்துகளை வெளிப்படுத்த, சினிமா உட்பட பல தளங்கள் உள்ளன,”என்றார்.
துாண்டும் மாநில அரசு!
பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:தேர்தல் வரலாற்றில் இந்த நாடு இதுவரை சந்தித்திடாத அளவில், வன்முறை சம்பவங்கள்மேற்கு வங்கத்தில் அரங்கேறி வருகின்றன. இது முழுக்க முழுக்க, மாநில அரசின் துாண்டுதலில் நடக்கிறது. இது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ., விசாரணை?
பா.ஜ., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கவுரவ் பாட்டியா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் நேரத்திலும், அதன் பிறகும் பல்வேறு வன்முறை சம்பவங்கள், படுகொலைகள், கொள்ளை, கற்பழிப்புகளில், திரிணமுல் காங்., தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டு இருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.