Type Here to Get Search Results !

பசு தானம்…. தங்க தானம்… நீர் தானம்…. நாம் கொடுக்கும் தானங்களின் பலன் என்ன…?

 

நாம் கொடுக்கும் தானங்களின் பலன் என்பது தானம் கொடுத்தவர்களின் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு அதன் பலன் கிடைக்கும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.

உதவி செய்தல்:
கோவில்களுக்கு சில நிதி உதவி செய்து வந்தால், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் நல்ல மனைவி அழகு மற்றும் அறிவு உள்ள பிள்ளைகள் அமைவார்கள்.

தங்க தானம்:

தங்கத்தினை தானமாக கொடுப்பதால் நீண்ட நாளும் ஒரு போதும் குறைவு இல்லாத பொருளாதாரம் அதாவது லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.

வெள்ளி தானம்:

வெள்ளியை தானமாக வழங்குவதால் மிக அழகான தோற்றம் பெறுவார்.

எள் தானம்:

கருப்பு எள்ளினை தானமாக கொடுப்பதால் இறந்தவர்கள் என்று கூறப்படும் பித்ரு ஆசீர்வாதம், குழந்தை பேறு ஆகியவை உண்டாகும்.

தானிய தானம்:

நவ தானியத்தினை தானமாக கொடுத்தால், குறைவே இல்லாத உணவு கிடைக்கும்.

பசு தானம்:

கோமாதா தானம் கொடுத்தால் தாயின் அன்பு நேர்மை தவறாத குடும்பம் என்ற பெரும் புகழும் கிடைக்கும்.

நீர் தானம்:

நீர் தானம் எனப்படுவது மனிதர்கள் மட்டும் அல்லது விலங்குகளின் தாகம், அதனுடைய பசியை தீர்த்ததால் நோய் நொடி இல்லாத வாழ்வு அமையும்.

நெய் தானம்:

நெய் தானமாக செய்தால் பிணி, பேய் போன்றவை நம்மை விட்டு அகலும்.

அரிசி தானம்:

அரிசியை தானம் செய்தால் சகல பாவங்கள் போகும்.

தேங்காய் தானம்:

தேங்காயை தானமாக கொடுத்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

ஆடை தானம்:

ஆடைகளை தானம் கொடுத்தால் ஆயுள் கூடும்.

தேன் தானம்:

சுவையான தேனை தானமாக அளித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அன்னதானம்:

இந்த அன்னதானத்தினை எவர் ஒருவர் வழங்குகிறார்களோ அவர்களுக்கு இறைஅருள் அதிகமாக கிட்டும் .

எப்படி செய்வது:

ஒரு மனிதன் தனது வருமானத்தில் ஆறில் ஒரு பங்கினை தனக்கென்று ஒதுக்கி வைக்க வேண்டும். அவற்றில் ஒரு பங்கினை தன்னை ஈன்று எடுத்த பெற்றோருக்கும், இரண்டாவது இறந்தவர்களுக்கு அதாவது பித்ருக்களுக்கு மூன்றாவது பங்கு இந்த சமூகத்திருக்கு மற்றும் நான்காவது பங்கினை நம் நாட்டினை ஆளும் அரசர்களுக்கு வரிகளாக கடைசி பங்கினை தானமாக வழங்க வேண்டும் என்று சாஸ்திர புத்தகங்கள் கூறுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.